செய்திகள் :

`திராவிட வரலாற்றுத் தடத்தில் தொல்லியல் ஆய்வுகள்' - பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கம்

post image

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் "திராவிட வரலாற்றுத் தடத்தில் தொல்லியல் ஆய்வுகள்" பற்றிய சிறப்பு ஆய்வரங்கம், பல்கலைக்கழகத்தின் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையத்தில் நடைபெற்றது.

இதில், "தொல்லியல் வரலாற்றில் சேலம் மாவட்டம்" என்ற தலைப்பில் பேசிய தொல்லியல்துறை உதவிக் கண்காணிப்பாளர் முனைவர் இரா.ரமேஷ், ``சேலம் மாவட்டத்தில் வேப்பிலைப்பட்டி, பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, பிடாரி அம்மன் கோயில் போன்ற இடங்களில் நுண்கற்காலக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், தெலுங்கனூர் என்ற இடத்தில் ஈமக்குழியில் புதிய கற்காலக் கருவிகள் மற்றும் இரும்புக் கத்திகள் கண்டறியப்பட்டுள்ளன. வெள்ளார், கோட்டைமேடு, மேச்சேரி, ஓமலூர், கோனேரிப்பட்டி, அம்மன்கோயில்பட்டி, நத்தம்பட்டி ஆகியவை வரலாற்றுத் தொடக்க காலப் பகுதிகளாகும். மேலும், பல கோயில்களில் இன்றுவரை புதிய கற்காலக் கருவிகள் மற்றும் பழைய கற்காலக் கருவிகள் சாமியாக வழிபடப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.

இதில், கி.பி.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன் கோயில்பட்டி கல்வெட்டு காலத்தால் முற்பட்டதாகும் என்றும், சேலம், மஞ்சவாடி, தொப்பூர் ஆகியவை பண்டைய கால வணிக வழிகளாக இருந்தன என்றும் கூறினார். பண்டைய காலச் சின்னங்களான கற்திட்டை, கற்குவை, கற்பதுகை, கல்வட்டம், நடுகல், முதுமக்கள் தாழி போன்ற ஈமச்சின்னங்கள் சேலம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

இதுவரை சேலம் மாவட்டத்தில் 120 இரும்புகால இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொளத்தூருக்கு அருகே உள்ள மாங்காட்டில் கற்பதுகையில் இருந்து சிதையுற்ற இரும்பு வாளின் மாதிரி கண்டெடுக்கப்பட்டுள்ளது அதை ஆய்வு செய்ததில் கி.மு. 1510 என்று கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார். சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலை மற்றும் கல்வராயன் மலையில் நிறைய கற்காலக் கருவிகள் மற்றும் புதிய கற்காலக் கருவிகளை 1864-ஆம் ஆண்டு ராபர்ட் புரூஷ்ஃபுட் கண்டெடுத்தார் என்று சேலத்தின் தொல்லியல் சிறப்பை எடுத்துரைத்தார்.

மேலும், ஓய்வுபெற்ற கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாளர் திரு.செ.கோவிந்தராஜ், "சிந்துவெளி நாகரிகத்தில் திராவிடக் கட்டடக்கலை கூறுகள்" என்னும் தலைப்பில் ஆய்வுரை வழங்கினார். அவர் பேசியதாவது; அனைவரும் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடக்கத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதோடு, "திராவிடம்" என்றால் என்ன என்று மாணவர்கள் மத்தியில் விளக்கினார். மேலும், சிந்துவெளி நாகரிகத்தில் திராவிடக் கட்டடக்கலை கூறுகளின் தன்மைகளை எடுத்துக் கூறினார்.

இந்நிகழ்வு துணைவேந்தர் நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மைய இயக்குநர் பேராசிரியர் இரா.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய தொல்லியல் துறை, உதவிக் கண்காணிப்பாளர் முனைவர் இரா. ரமேஷ் மற்றும் பணி நிறைவு பெற்ற கிருட்ட

ணகிரி அருங்காட்சியகக் காப்பாளர் திரு. செ.கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

70களில் திருச்சி எப்படி இருந்தது தெரியுமா? | கிறிஸ்துமஸ் இரவுகள் – பாகம் 2 | #Trichy | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

துபாய் இந்திய நகரமாக இருந்த கதை தெரியுமா? மறைக்கப்பட வரலாறு!

'சூரியன் மறையாத பேரரசு' எனப் புகழப்படும் அளவு உலகம் முழுவதும் பரவியிருந்தது பிரிட்டிஷ் ராஜ்ஜியம். உலகில் இப்போதுவுள்ள 60 முதல் 65 நாடுகள் பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பட்டில் இருந்தன. இவை அந்த காலத்தின்... மேலும் பார்க்க

உலக நாகரிகத்தின் தொட்டில்.! இந்தியாவின் முதல் `ஆன் சைட் மியூசியம்' ஆதிச்சநல்லூர்! | Photo Album

'உலக நாகரிகத்தின் தொட்டில்.! இந்தியாவின் முதல் 'ஆன் சைட் மியூசியம்' தூத்துக்குடி ஆதிச்சநல்லூர்.!இந்தியாவின் முதல் 'ஆன் சைட் மியூசியம்' தூத்துக்குடி ஆதிச்சநல்லூர்.!இந்தியாவின் முதல் 'ஆன் சைட் மியூசியம்... மேலும் பார்க்க