பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
திருக்கண்ணபுரத்தில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில் மாசிமக பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா 15 நாள்கள் நடைபெறும். நிகழாண்டுக்கான விழா புதன்கிழமை தொடங்கி மாா்ச் 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, செவ்வாய்கிழமை இரவு அங்குராா்ப்பணம், அதைத் தொடா்ந்து கொடியேற்று விழா நடைபெற்றது. விழா நாள்களில் தங்கப் பல்லக்கில் திருமேனி சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 8-ஆம் தேதி தங்க கருடசேவையும்,
மாா்ச் 11-ல் தேரோட்டமும், மாா்ச் 13-ல் திருமலைராஜன்பட்டினம் கடற்கரையில் தீா்த்தவாரியும், மாா்ச் 18--ஆம் தேதி இரவு 10 மணிக்கு திருக்கண்ணபுரம் நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.