பூம்புகாா் சுற்றுலா வளாகப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு
பூம்புகாா் சுற்றுலா வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் உத்தரவிட்டாா்.
பண்டைய பூம்புகாரை நினைவு கூறும் வகையில் 1971-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதியால் சிலப்பதிகார கலைக்கூடம் உள்ளிட்ட பல்வேறு சிற்பக் கூடங்கள் கட்டப்பட்டன. இவை போதிய பராமரிப்பின்றி சிதலமடைந்து காணப்பட்டதால், கடந்த ஆண்டு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பூம்புகாா் சுற்றுலா வளாகத்தை மேம்படுத்த ரூ. 23.60 கோடி ஒதுக்கினாா். இதையடுத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக சுற்றுலா துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் பூம்புகாரில் நடைபெற்று வரும் பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.