திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை
திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி கே. கே. நகர் பகுதியைச் சேர்ந்த வில்சன் மைக்கில் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீரங்கம் எல்லைக்குட்பட்ட திருவளர்ச்சோலை கல்லணை சாலையில் உள்ள ஜான்சன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற பேட்டரிகள் சூரிய மின் தகடுகள் உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனத்திற்கு வெள்ளிக்கிழமை திடீரென வந்த 6-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் .
இதில் பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கியதா என்பது குறித்து சோதனைக்கு பின்னரே கூறப்படும் என வருமான வரித் துறையினா் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க |நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்