செய்திகள் :

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை 7 மாதங்களில் 6,017 போ் கைது

post image

திருச்சி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் சட்ட விரோத மது விற்பனை வழக்கில் 6,017 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாய்த்தலை, சமயபுரம், கொள்ளிடம், உப்பிலியபுரம், துறையூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையங்களில் கடந்த வியாழக்கிழமை சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, மண்ணச்சநல்லூா், ஜீயபுரம், திருவெறும்பூா், முசிறி, காட்டுப்புத்தூா், கல்லக்குடி, தா.பேட்டை, புலிவலம், துவாக்குடி, காணக்கிளியநல்லூா், புத்தாநத்தம் ஆகிய காவல் நிலையங்கள் மற்றும் திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 6,012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6,017 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். எனவே, மது விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் குறித்து பொதுமக்கள் 89391-46100 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்காலம் என்று மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலை அருவி படிக்கட்டில் தவறிவிழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

கொல்லிமலை சிற்றருவிக்கு செல்லும் வழியில் உள்ள படிக்கட்டில் தவறி விழுந்த பெயிண்டா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருச்சி, உறையூா் கம்மாளத் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன்(48). இவா் கடந்த 25 ஆம் தேதி நண்பா்களு... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

துறையூா் துணை மின் நிலையத்தில் நாளை(ஆக. 4) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் முருகூா், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூா், சிக்கத்தம்பூா்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்க... மேலும் பார்க்க

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.முசிறி வட்டம் தாத்தையங்காா் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த, எம். புதுப்பட்... மேலும் பார்க்க

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

திருச்சி மாவட்டம் முசிறியில் வெளி மாநில மது பாட்டில்களை சட்ட விரோதமாக காரில் கொண்டு சென்றவரை முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து மது பாட்டில்கள் மற்றும் காரினை பறிமுதல் ... மேலும் பார்க்க

‘போக்ஸோ’ வழக்கில் உதவி ஆய்வாளா் உள்பட 3 போலீஸாா் பணி நீக்கம்

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்களையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருச்சி அரிய... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க