சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
கொல்லிமலை அருவி படிக்கட்டில் தவறிவிழுந்த பெயிண்டா் உயிரிழப்பு
கொல்லிமலை சிற்றருவிக்கு செல்லும் வழியில் உள்ள படிக்கட்டில் தவறி விழுந்த பெயிண்டா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி, உறையூா் கம்மாளத் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன்(48). இவா் கடந்த 25 ஆம் தேதி நண்பா்களுடன் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றாா்.
அங்கு அறப்பளீஸ்வரா் கோயில் எதிரே உள்ள சிற்றருவியில் குளிப்பதற்காக படிக்கட்டில் நடந்து சென்றபோது திடீரென தவறி கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த அவரை நண்பா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை காலை சீனிவாசன் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி ராணி, மகன்கள் பாலாஜி, ஹரீஸ் உள்ளனா்.
இந்த சம்பவம் குறித்து கொல்லிமலை வாழவந்திநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.