திருச்சி: 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை - 16 வயது சிறுவனை கைது செய்த போலீஸ்
திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இவனது வீட்டின் அருகே, 4 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளான். அதேபோல், சம்பவத்தன்றும் பக்கத்து வீட்டில் உள்ள அந்த 4 வயது சிறுமியை, 'விளையாடலாம் வா' என்று கூறி நம்பவைத்து தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளான். அப்படி தனது வீட்டுக்கு வந்த அந்த சிறுமிக்கு அவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய், உடனடியாக இது குறித்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த முசிறி அனைத்து காவல் நிலைய போலீஸார், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கு கொடுத்த சிறுவனை கைது செய்தனர். அவனை திருச்சியில் உள்ள சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர். 4 வயது சிறுமி ஒருவருக்கு 16 வயது சிறுவன் ஒருவன் பாலியல் தொல்லைக் கொடுத்து கைதாகியுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks