செய்திகள் :

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்?

post image

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார்.

சுனிதாவையும் அவருடன் சென்றுள்ள மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் அழைத்துவருவதற்காக விண்ணில் செலுத்தப்படவிருந்த ஸ்போஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட்டில், முக்கிய பாகத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் எழுந்ததால் அந்தத் திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

கோளாறு சரிசெய்யப்பட்ட சரிசெய்யப்பட்டதையடுத்து, ஃபுளோரிடாவிலுள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து இந்திய நேரப்படி சனிக்கிழமை (மாா்ச் 15) அதிகாலை 5 மணியளவில் ஃபால்கன் 9 வாயிலாக டிராகன் விண்கலம் செலுத்தப்பட்டது. சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்துவர புறப்பட்ட ஃபால்கான் 9 டிராகன் விண்கலத்தில் அமெரிக்க, ஜப்பான், ரஷியாவைச் சேர்ந்த 4 விஞ்ஞானிகள் புறப்பட்டுள்ளனர்.

டிராகன் விண்கலத்தில் சென்றுள்ள க்ரீயூவ்-10 குழுவினர் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) காலை 9 மணிக்கு சர்வதேச வின்வெளி நிலையத்தை சென்றடைவர்.

இதனையடுத்து, சுனிதா வில்லியம்ஸும் பட்ச் வில்மோரும் டிராகன் விண்கலத்தில் அமெரிக்க மற்றும் ரஷிய வின்வெளி வீரர்கள் இருவருடன் சேர்ந்து மார்ச் 19-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறுகளாலோ அல்லது பிற காரணங்களாலோ கால தாமதம் ஏற்படவும் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உள்பட 41 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடையா? டிரம்ப் சொல்வது என்ன?!

பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீ... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: 6 பேர் பலி!

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள டிரோன் தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள பீய்ட் லஹியாவில் பொது இடத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழ... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய கியூபா! என்ன நடந்தது?

கியூபாவில் நேற்று (மார்ச். 14) திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான மின்வெட்டு காரணமாக அந்நாட்டின் பல மாகாணங்கள் இருளில் மூழ்கின. கியூபா தலைநகரான ஹவானா அருகிலுள்ள தீஸ்மெரோ துணை மின் நிலையத்தில் நேற்று இ... மேலும் பார்க்க

கிளா்ச்சிப் படை முன்னேற்றம் காங்கோவிலிருந்து வெளியேறும் தென் ஆப்பிரிக்க ராணுவம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிய சூழலில், அந்த நாட்டின் அரசுப் படையினருக்கு ஆதரவாகப் போரிட்டுவந்த தென் ஆப்... மேலும் பார்க்க

உக்ரைன் போருக்குத் தீா்வு காண ‘உன்னதப் பணி’ - மோடி, டிரம்ப்புக்கு புதின் நன்றி

உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவர ‘உன்னதப் பணியை’ மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமா் மோடி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளா... மேலும் பார்க்க

கனடா பிரதமராக மாா்க் காா்னி பதவியேற்பு: அரசியல் அனுபவமே இல்லாதவா்

கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும், அரசியல் அனுபவமே இல்லாதவருமான மாா்க் காா்னி (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். கனடா மத்திய வங்கி, பிரிட்டன் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காா்னி, நேரடியாக க... மேலும் பார்க்க