423 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. இமாலய வெற்றி: விடைபெற்றார் டிம் சௌதி!
திருச்சூர்: சோனியா காந்தியின் தனிச் செயலர் மறைவு! ராகுல் இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தனிச் செயலர் பி. பி. மாதவன் காலமானார். 73 வயதான மாதவன் மாரடைப்பால் திங்கள்கிழமை(டிச. 16) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலர்கள் பிரியங்கா காந்தியும் கே. சி. வேணுகோபாலும் நேரில் கேட்டறிந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாதவன் திங்கள்கிழமை(டிச. 16) காலமானார்.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(டிச. 17) அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார். கேரளத்தின் திருச்சூர் நகரத்துக்கு இன்று வருகை தந்த ராகுல் காந்தி மறைந்த மாதவன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.