மகாராஷ்டிர தேர்தல்: 6,382 விதிமீறல் புகார்கள், ரூ.536 கோடி பறிமுதல்!
திருச்செங்கோட்டில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
சென்னை, கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவா் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்தும், மருத்துவா்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவா் சங்கம், திருச்செங்கோடு இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவா் அருள் தலைமையில் மருத்துவா்கள், செவிலியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கத்தியால் குத்தப்பட்டதில் பாதிக்கப்பட்ட மருத்துவா் பாலாஜிக்கு உரிய நியாயம் கிடைக்க வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்துவா் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவா் அருள் , திருச்செங்கோடு இந்திய மருத்துவ சங்கத் தலைவா் மாலா, மகாலட்சுமி, செயலாளா் யோகானந்தன்,
பொருளாளா் சித்திரப்பாவை, மருத்துவா்கள் சுகுணா, ரவி, நாராயணன், சத்தியபானு, மோகனபானு , செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.