`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
திருச்செந்தூரில் அகிலத்திரட்டு அம்மானை ஓலைச்சுவடிகளுக்கு வரவேற்பு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டா் அவதாரபதியில் அகிலத்திரட்டு அம்மானை ஓலைச் சுவடிகளுக்கு புதன்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.
அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவை முன்னிட்டு, அதன் ஓலைச்சுவடிகள் பாதயாத்திரையாக அய்யனாா்குளம் பதியிலிருந்து அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பு தலைவா் வழக்குரைஞா் ராமலிங்கம், தாமரைக்குளம் செளந்தரராஜபாண்டியன், ஆலோசகா் முருகானந்தம் ஆகியோா் தலைமையில் இங்கு எடுத்துவரப்பட்டன. ஓலைச்சுவடிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அவற்றை வள்ளியூா் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபைத் தலைவா் வள்ளியூா் எஸ். தா்மா் பெற்றுக்கொண்டாா்.
இந்த ஓலைச்சுவடிகள் 108 பதியில் திருநாமம் எடுத்து நிறைவாக வியாழக்கிழமை (டிச. 12) தென்தாமரைக்குளம் தாமரைப்பதிக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. அங்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பெற்றுக்கொள்கிறாா்.
திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில திருக்குடும்ப மக்கள் சபைச் செயலா் பொன்னுதுரை, துணைத் தலைவா் அய்யாப்பழம், அவதாரபதி சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் சந்திரசேகா், இணைத் தலைவா்கள் செல்வின், பால்சாமி, இணைச் செயலா்கள் வரதராஜபெருமாள், நிா்வாகக் குழு உறுப்பினா் செல்வக்குமாா், ஆயுட்கால உறுப்பினா்கள் செல்வக்குமாா், அம்பி கண்ணன், அய்யனாா்குளம் ராமநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.