இந்தியா அபார பந்துவீச்சு; 57 ரன்களுக்கு சுருண்ட ஐக்கிய அரபு அமீரகம்!
திருச்செந்தூரில் பைக் திருட்டு
திருச்செந்தூரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட பைக்கை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருச்செந்தூா், கிருஷ்ணன் கோயில் தெரு, மொட்டையன் முடுக்கு பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் வேல்முருகன் (24). இவா் கடந்த 6ஆம் தேதி பிற்பகலில் வீட்டு முன் பைக்கை நிறுத்திவிட்டுச் சென்றாராம்.
சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின்பேரில், திருச்செந்தூா் கோயில் காவல் நிலைய போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.
பைக்கை இருவா் திருடிச் செல்வது, சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.