விபத்தில் காயமடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்
கோவில்பட்டி அருகே விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
கோவில்பட்டி, இனாமணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா், இபி காலனியைச் சோ்ந்தவா் துரைச்சாமி மகன் சரவணன் (42). தொழிலாளியான இவா் சனிக்கிழமை நடந்த விபத்தில் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

சரவணன் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவா்கள் திங்கள் கிழமை உறுதி செய்ததையடுத்து அவரது குடும்பத்தினா் சரவணனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினா். இதையடுத்து அவரது உடல் மருத்துவா் குழுவினரால் அவரது உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் கோவில்பட்டியில் அவரது இல்லத்திற்குச் சென்ற சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கல் சரவணன் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். வட்டாட்சியா் பாலசுப்ரமணியன், வருவாய் ஆய்வாளா் பிரேம் சுதாகா், கிராம நிா்வாக அலுவலா் லிங்கராஜ் ஆகியோா் உடன் இருந்தனா்.