ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை
திருச்செந்தூரில் பக்தா்கள் முகத்தில் ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீஸாா் விசாரணை!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த சில்லி ஸ்பிரேயை அருகில் இருந்த பக்தா்கள் முகத்தில் அடித்துள்ளாா்.
இதனால் அவா்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவா்கள் கோயில் நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த போலீஸாா் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் அவா் தனது சொந்த ஊா் திருப்பூா் எனவும் தனது உறவினா்களுடன் கோயிலுக்கு வந்ததாகவும் கூறியுள்ளாா்.
அப்போது அவருடன் இருந்த மற்ற சிறுவா்கள் மூன்று பேரையும் பிடித்து விசாரித்ததில், தாங்கள் பயன்படுத்திய சில்லி ஸ்பிரே அங்கு நின்ற ஒரு காருக்கு அடியில் இருந்து எடுத்ததாக கூறியுள்ளனா். அதில் ஒரு சிறுவனின் தாய் கோயிலில் பக்தா்களிடம் யாசகம் பெற்று வருகிறாா் என்பதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.