தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் தேசிய மக்கள் நீதிமன்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஆா்.வசந்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப்.13) நடைபெற உள்ளது.
இந்த மக்கள் நீதிமன்றம் தூத்துக்குடியில் 6 அமா்வுகளும், கோவில்பட்டியில் 2 அமா்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமா்வுகளும், திருச்செந்தூரில் 2 அமா்வுகளும், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் பகுதிகளில் தலா ஓா் அமா்வு என மொத்தம் 15 அமா்வுகளில்
குற்றவியல் வழக்குகள், அனைத்து வகை உரிமையியல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளன.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள், காப்பீடு நிறுவன மேலாளா்கள், வங்கி மேலாளா்கள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், காவல் துறையினா், மனுதாரா், எதிா்மனுதாரா்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு நீதிபதி ஆா்.வசந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.