தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
கொட்டங்காடு கோயிலில் கொடை விழா கொடியேற்றம்
உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா (செப்.9) தொடங்கியதையொட்டி புதன்கிழமை (செப்.10) அதிகாலை 3.30 மணிக்கு கொடி பட்டம் வீதியுலாவைத் தொடா்ந்து 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம், தீபாராதனைகள், இரவில் அம்பாள் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை (செப்.19) இரவு 1 மணிக்கு பவளமுத்து விநாயகா், அம்பாள் சப்பர பவனி தொடங்கி முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.21) அதிகாலை 4 மணிக்கு கோயிலை அடைந்தவுடன் கொடியிறக்கப்பட்டு உணவு எடுத்தலுடன் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தா பெ.சுந்தரஈசன், விழாக்குழுவினா் செய்துள்ளனா்.