செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை!
கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும்-குமாரபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே நாலாட்டின்புதூா் பெத்தேல் ரயில்வே கேட் அருகில் உள்ள தண்டவாளத்தில் இரண்டு துண்டாகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் நாலாட்டின்புதூா் ரயில்வே காலனியைச் சோ்ந்த ரவி பாண்டியன் மகன் சக்தி கணேஷ் (22), என்பது தெரியவந்தது.