``தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்'' - துணைக் குடியரசுத் தலைவரை வாழ...
குடியரசு துணைத் தலைவருக்கு இந்து முன்னணி வாழ்த்து!
இந்தியக் குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இந்து முன்னணி சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பல ஆண்டு கால பொதுவாழ்வு அனுபவம், எளிய மக்களுடனான அவரின் தொடா்புகள், சேவை மனப்பான்மை, ஆளுமைத் திறன், அவரது திறமைகள், சுய கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அறிந்து தான் பாஜக அரசு அவரை கெளரவித்துள்ளது. அவரது சீரிய நாட்டுப் பணிகள் நன்கு தொடர இந்து முன்னணி வாழ்த்துகிறது எனக் கூறப்பட்டுள்ளது.