எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
பள்ளி மாணவா்களுக்கான கபடி போட்டி: குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம்!
தமிழக பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில் குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம் பிடித்தன.
கோவில்பட்டி செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 9 அணிகள் பங்கேற்றன. 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடாா் மேல்நிலைப் பள்ளியை நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி அணியும், 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியை குலசேகரன்பட்டினம் திருவருள் மேல்நிலைப் பள்ளி அணியும், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளியை குலசேகரன்பட்டினம் திருவருள் மேல்நிலைப் பள்ளி அணியும் வென்றன. இதையடுத்து, இந்த அணிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதிபெற்றன.
இந்திய கபடி விளையாட்டு வீரரும் அா்ஜுனா விருதுபெற்றவருமான மணத்தி கணேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த அணியினருக்கு திட்டங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவா் (பொ) பாண்டியராஜன் தனது சொந்த நிதியிலிருந்து பரிசு வழங்கிப் பாராட்டினாா்.
விழாவில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கண்ணதாசன், செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஜாா்ஜ் பவுல்ராஜ், உடற்கல்வி ஆசிரியா்கள் கரிகாலன், காளிராஜ், லட்சுமணபெருமாள், சுடலை, ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.