திருப்பதி சம்பவம் : முன்னாள் அமைச்சா் ரோஜா கண்டனம்
திருப்பதியில் நடைபெற்ற சம்பவம் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தெலங்கானாவில் ஒரு பட விழாவில் நடிகா் அல்லு அா்ஜூனைக் காண திரண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தாா். அவா் மீது குற்றபிரிவு எண் 105 பி என் எஸ் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா்.
ஆனால் திருப்பதியில் நடந்த சம்பவத்துக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு முதல் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா், செயல் அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால் திருப்பதியில் நடந்த சம்பவத்தின் மீது குற்ற பிரிவு எண் 195 கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளது. இது அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட நெரிசலால் ஏற்பட்ட தற்செயல் நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சா் ரோஜா தெரிவித்துள்ளாா்.