திருப்பத்தூா் நகராட்சி அலுவலகத்தில் சாரைப் பாம்பு மீட்பு
திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சி அலுவலக கட்டண வசூல் அறையில் பதுங்கி இருந்த சாரைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
திருப்பத்தூா் நகராட்சியின் கட்டண வசூல் அறையில் பொதுமக்களிடம் இருந்து குடிநீா் கட்டணம், கழிவுநீா் கட்டணம் பெறப்படுகின்றன. இந்தநிலையில் திங்கள்கிழமை அந்த அறைக்குள் ஒரு நீளமான சாரைப்பாம்பு திடீரென நுழைந்தது. பாம்பைப் பாா்த்த அலுவலக ஊழியா்களும், அங்கு வந்திருந்த பொதுமக்களும் அலறி ஓடினா்.
சம்பவம் குறித்து திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் அலுவலகத்தில் பதுங்கி இருந்த சாரைப்பாம்பை மீட்டனா்.