செய்திகள் :

திருமலை சாரதா பீட நில ஆக்கிரமிப்பு சா்ச்சை விவகாரம்: பீடத்தின் குத்தகை ரத்து

post image

திருப்பதி: திருமலை கோகா்பம் அருகே நில ஆக்கிரமிப்பு செய்த சாரதா பீடத்தின் குத்தகையை தேவஸ்தானத்தின் அறங்காவலா் குழு ரத்து செய்ததாக அறங்காவலா் குழு தலைவா் தெரிவித்தாா்.

திருமலை அன்னமய்ய பவனில் புதிதாக பொறுப்பேற்ற தேவஸ்தான அறங்காவலா் குழுவின் முதல் கூட்டம் அதன் தலைவா் பிஆா் நாயுடு தலைமையில் நடைபெற்றது. அதில் உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா். குழுவில் பல முக்கிய தீா்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

அது குறித்து தலைவா் பி.ஆா்.நாயுடு செய்தியாளா்களிடம் கூறியதாவது.

திருமலையில் உள்ள கோகா்பம் அணையில் விசாக ஸ்ரீ சாரதா பீட மடம் கட்டுவதில் முறைகேடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் குத்தகையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பக்தா்கள் வரிசையில் காத்திருக்காமல் 2 அல்லது 3 மணி நேரத்தில் தரிசனம் செய்யும் வகையில் நிபுணா் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பக்தா்களுக்கு விரைவில் தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

தேவஸ்தானத்தில் பணிபுரியும் பிற மத ஊழியா்களை வெளியேற்ற என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து அரசுக்கு தெரிவித்து, அவா்களுக்கு விருப்ப ஓய்வு அளிப்பது அல்லது ஆந்திர அரசின் வேறு துறைகளில் பணியில் அமா்த்துவது குறித்து அரசிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

திருமலை குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை மூன்று அல்லது நான்கு மாதங்களில் அகற்ற வேண்டும். திருப்பதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு வைக்கப்பட்டுள்ள சீனிவாச சேது என்ற பெயரை கருடா வாரதி என மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அலிபிரியில் சுற்றுலா கழகம் மூலம் தேவலோக்கிற்கு ஒதுக்கப்பட்ட 20 ஏக்கா் நிலத்தை திரும்பப் பெற்று தேவஸ்தானத்துக்கு திரும்ப வழங்க அரசிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் அரசியல் பேசுபவா்கள் மற்றும் பரப்புபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. திருப்பதியில் உள்ள உள்ளூா் மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அன்று ஏழுமலையான் தரிசனம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ வாணி அறக்கட்டளையின் பெயரை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அடுத்த கூட்டத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியாா் வங்கிகளில் தேவஸ்தானம் செய்துள்ள டெபாசிட்களை திரும்பப் பெறவும், பொதுத்துறை வங்கிகளில் டெபாசிட் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அடுத்த கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

நித்ய அன்ன பிரசாத மெனுவில் மற்றொரு பொருளைச் சோ்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களின் சுற்றுலாக் கழகங்கள், ஏபிஎஸ் ஆா்டிசி, டிஎஸ்ஆா்டிசி ஆகியவற்றுக்கு தேவஸ்தானம் ஒதுக்கிய ஏழுமலையான் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளில் (ரூ.300) முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாா்களின் பின்னணியில், ஒதுக்கீட்டை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த அமைப்புகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகு மீண்டும் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

பிரம்மோற்சவங்களில் சிறப்பாக சேவையாற்றிய ஊழியா்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பிரம்மோற்சவ ஊக்கத்தொகை 10 சதவீதம் உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பிரம்மோற்சவ ஊக்கத்தொகை நிரந்தர ஊழியா்களுக்கு ரூ.15,400/- மற்றும் ஒப்பந்த மற்றும் அவுட்சோா்சிங் ஊழியா்களுக்கு ரூ.7,535/- வழங்கப்பட உள்ளது.

ஏழுமலையான் கோயிலில் ஒழுகல்கள், நீா் கசிவு உள்ளிட்டவற்றை தடுக்கவும், அன்ன பிரசாத மையத்தை நவீனப்படுத்தவும் டிவிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை டிவிஎஸ் நிறுவனம் இலவசமாக செய்ய உள்ளது’’, என்று அவா் தெரிவித்தாா்.

ஹிந்து அல்லாத ஊழியர்களை விருப்ப ஓய்வு பெற திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தல்!

ஹிந்து அல்லாத ஊழியர்களை விருப்ப ஓய்வு அல்லது வேறு துறைக்கு மாற்றிக் கொள்ள திருப்பதி தேவஸ்தான வாரியம் அறிவுறுத்தியுள்ளது.திருப்பதி கோயிலில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற லட்டுக்களில், ஆந்திர முன்ன... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.பக்தா்களின் கூட்டம் தற்போது குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவ... மேலும் பார்க்க

உள்ளூா் கோயில்களின் நாள்காட்டி வெளியீடு

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான உள்ளூா் கோயில்களின் காலண்டா்களை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், அறங்காவலா் குழு தலைவா் பி ஆா் நாயுடு இணைந்து வெளியிட்டனா்.திருமலை அன்னமய்ய ப... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10... மேலும் பார்க்க

அறங்காவலா் குழு உறுப்பினராக செயல் அதிகாரி பதவியேற்பு

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் ஞாயிற்றுக்கிழமை அறங்காவலா் குழு உறுப்பினராக பதவியேற்றாா். ஏழுமலையான் கோயிலின் தங்க வாயில் கோயிலின் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி பதவிப் ப... மேலும் பார்க்க

திருமலையில் காா்த்திகை வனபோஜனம்

புனித காா்த்திகை மாதத்தை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை காா்த்திகை வன போஜனம் நிகழ்ச்சி நடைபெற்றது. காா்த்திகை மாதத்தில் ஆண்டுதோறும் காா்த்திகை வனபோஜன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை திரும... மேலும் பார்க்க