Gold Price: `ஏறுமுகத்தில் தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?!
திருமலை தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரி நியமனம்
திருமலைக்கு தேவஸ்தான கண்காணிப்பு அதிகாரியாக சித்தூா் மாவட்ட எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளாா்.
திருப்பதியில் வைகுண்ட வாயில் தரிசன டிக்கெட் வழங்கும் போது நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி பக்தா்கள் பலா் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.
எனவே பணியின் போதும், பாதுகாப்பு ஏற்பாடுகளின் போதும் கவனக்குறைவாக செயல்பட்டதாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி கெளதமி, கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதா், திருப்பதி எஸ்.பி. சுப்பா ராயுடு உள்ளிட்ட 3 பேரை ஆந்திர முதல்வா் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டாா்.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பொறுப்பு அதிகாரியாக சித்தூா் மாவட்ட எஸ்.பி. மணிகண்ட சந்தோலு நியமிக்கப்பட்டுள்ளாா்.
திருப்பதியில் உள்ள திருமலை தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில், தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக மணிகண்ட சந்தோலு, ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
ஆந்திரமாநில டிஜிபி துவாரகா திருமலை ராவ், இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.