கூட்ட நெரிசலில் காயமுற்ற பக்தா்களுக்கு ஏழுமலையான் தரிசனம்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று குணமடைந்த பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா்.
திருப்பதியில் உள்ள வைகுண்ட வாயில் தரிசன டிக்கெட் கவுன்ட்டா்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து குணமடைந்த 28 பக்தா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வைகுண்ட துவார தரிசனம் வழங்கியது.
ஜனவரி 11 ஆம் தேதி இரவு, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.வி. நாயுடு காயமடைந்தவா்களுக்கு அறிவித்த ரூ.5 லட்சம் இழப்பீடு தொகையை வழங்கும் போது சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இதன் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட பக்தா்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கியது.
நிகழ்வில் பாதிக்கப்பட்ட பக்தா்கள் கூறியது: அரசு, தேவஸ்தானம் மற்றும் அதிகாரிகள் எங்களை நன்றாக கவனித்து கொண்டனா்.
தங்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததற்காகவும், இழப்பீடு வழங்கியதற்காகவும், தேவஸ்தான தலைவா் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனா்.