வில்வித்தை பயிற்சியாளருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி
திருமானூரில் மாா்ச் 22-இல் ஜல்லிக்கட்டு: காளைகள், வீரா்கள் பதிவு செய்ய அழைப்பு!
அரியலூா் மாவட்டம், திருமானூரில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 22) நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரா்கள் மாா்ச் 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: திருமானூரில் மாா்ச் 22-ஆம் தேதி ஜல்லிகட்டு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ள காளைகளை அதன் உரிமையாளா்களும், மாடுபிடி வீரா்கள் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இணையதளம் மூலம் மாா்ச் 17, மாா்ச் 18 மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.
இந்தப் பதிவு ஒரு ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே பொருந்தும். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளா் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளா் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
பதிவு செய்தவா்களின் சான்றுகள் சரிபாா்க்கப்பட்ட பின் தகுதியான நபா்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். டோக்கன் உள்ள மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.