திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள்: மனித உரிமை ஆணையம் வேண்டுகோள்
திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று மனித உரிமை மீறல் ஆணைய உறுப்பினர் வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் மனித உரிமை மீறல்கள் குறித்து மாநில மனித உரிமை அமர்வு ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் பேசியதாவது, பொதுமக்களுக்கு மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்த விழிப்புணர்வு அதிகமாக தேவைப்படுகிறது. தமிழகத்தில் மனித உரிமை மீறல்கள் பிரச்னைகள், கடந்த காலத்தைவிட தற்போது குறைந்துள்ளன.
சினிமாக்களில் வரும் வன்முறைக் காட்சிகள், ஆயுதங்களின் பயன்பாடு முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு நல்லொழுக்கம் தொடர்பான வகுப்புகளை ஆசிரியர்கள் அதிகப்படுத்த வேண்டும்.
தங்களின் குழந்தைகளின் சமூக வலைதளப் பயன்பாட்டை, பெற்றோர்கள் நல்ல முறையில் கண்காணித்தல் அவசியம் என்று தெரிவித்தார்.