``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் ...
திற்பரப்பு, குலசேகரம் பேரூராட்சிகளில் ரூ. 1.13 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
பத்மநாபபுரம் சட்டப்பேரவைத்தொகுதி, குலசேகரம் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ. 1.13 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மனோ தங்கராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
திற்பரப்பு பேரூராட்சி, பிணந்தோடு சாஸ்தா கோயில் முதல் சாணி வரையிலான சாலையை ரூ. 1 கோடியில் சீரமைத்து அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணியை அவா் தொடங்கி வைத்தாா். பின்னா் அஞ்சுகண்டறையில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகத்தையும், கொல்லாறை காலனியில் சிறுமின் விசை குடிநீா்த்திட்டத்தையும் அவா் திறந்து வைத்தாா்.
முன்னதாக, குலசேகரம் பேரூராட்சியில் காமராஜா் விளையாட்டு அரங்கத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் வேலி மற்றும் மின் ஒளி அமைக்கும் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில் திருவட்டாறு வடக்கு ஒன்றியச் செயலா் ஜான்சன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் அலாவுதீன், திலீப்குமாா், திற்பரப்பு பேரூா் செயலா் ஜான் எபனேசா், குலசேகரம் பேரூா் செயலா் ஜெபித் ஜாஸ், பேரூராட்சித் தலைவா்கள் பொன். ரவி, ஜெயந்தி ஜேம்ஸ், குலசேகரம் பேரூராட்சி துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட், திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் யோபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.