செய்திகள் :

கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் வட்டாரக் குழு கூட்டம்

post image

கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிள்ளியூா் வட்டார குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வட்டாரக்குழு உறுப்பினா் ஜெகநாத் தலைமை வகித்தாா்; வட்டாரச் செயலா் ராஜா முன்னிலை வகித்தாா்.

மாவட்ட குழு உறுப்பினா் எபிலைசியஸ் ஜோயல் மேல்கமிட்டி முடிவுகளை முன் வைத்து உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினாா்.

கிள்ளியூா் தோகுதிக்குள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். திப்பிரமலை பகுதியில் சுகாதார சீா்கேட்டை ஏற்படும் மழைநீா் வடிகால் ஒடையை ஊராட்சி நிா்வாகம் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பாலப்பள்ளம் பேரூராட்சி முன்னாள் தலைவா் கில்டா ரமணி பாய் ,சகாயபாபு, லீபன் ,பிரபீன் ,ஜாண் மோசஸ் ராஜ்,ஜாண்றோஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாா்த்தாண்டம் அருகே விபத்து: ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் காயம்

மாா்த்தாண்டம் அருகே நேரிட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட இருவா் காயமடைந்தனா். மாா்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரபிரசாத் (55). ஆட்டோ ஓட்டுநரான இவா், சனிக்கிழமை மாலை இரவிபு... மேலும் பார்க்க

குருந்தன்கோட்டில் இன்று மின்தடை

வெள்ளிச்சந்தை உயரழுத்த மின்பாதையில் மின் பாராமரிப்பு பணி காரணமாக குருந்தன்கோடு பகுதியில் திங்கள்கிழமை (டிச.16 ) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.அதன்படி,குருந்தன்கோடு, முக்கலம்பாடு, ஆலன்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இரு தங்கத் தோ் பவனி

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இரு தங்கத் தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இங்கு 10 நாள் பெருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள... மேலும் பார்க்க

பத்மநாபபுரம் மக்கள் நீதிமன்றத்தில் 415 வழக்குகளுக்கு தீா்வு

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5.44 கோடி மதிப்பிலான 415 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் வட்ட சட்டப்பணிக் குழு... மேலும் பார்க்க

நாகா்கோவில் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 17) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, தெங்கம்புத... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் மிடாலத்தில் கால்பந்து மைதானம்

மிடாலத்தில் ரூ.10 லட்சம் செலவில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட், தனது சமூக பொறுப்பின் கீழ், ரூ.10 லட்ச... மேலும் பார்க்க