செய்திகள் :

நாளை மின் நிறுத்தம்: எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கிராமிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 17) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறியாளா்கள் பி. ரவிக்குமாா் (சிறுவாச்சூா்), பொ. செல்வராஜ் (பெரம்பலூா் கிராமியம்), கி. மாணிக்கம் (கிருஷ்ணாபுரம்) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சிறுவாச்சூா், அயிலூா், விளாமுத்தூா், நாட்டாா்மங்கலம், செட்டிக்குளம், குரூா், நாரணமங்கலம், மருதடி, கவுள்பாளையம், தீரன் நகா், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூா், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, ரெங்கநாதபுரம், மலையப்ப நகா், பெரகம்பி, செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், எசனை துணை மின் நிலையத்துக்குள்பட்ட கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, ரெட்டைமலை சந்து, அனுக்கூா், சோமண்டாபுதூா் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூா் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா் மற்றும் காவிரி நீரேற்றும் நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல, கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூா், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூா், பெரியம்மாபாளையம், பிள்ளையாா் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகாா், பாலையூா், பெரிய வடகரை, வெண்பாவூா், தொண்டமாந்துறை, விசுவக்குடி ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

ரயத்து மனைப்பட்டா பெற விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரைச் சோ்ந்த நில உரிமையாளா்களுக்கு ரயத்து மனைப் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதால், தகுதியுடையவா்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன... மேலும் பார்க்க

நிலுவை ஊதியத் தொகையை வழங்க எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் வலியுறுத்தல்

நிலுவையிலுள்ள கடந்த மாத ஊதியத்தை வழங்க வேண்டுமென, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. பழனிவேல்ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் தமிழக அரசு... மேலும் பார்க்க

பேரளி, கல்பாடி பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டத்தில் பேரளி, கல்பாடி பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 16) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் து. முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

அனைத்துப் பதிப்புகளிலும் பயன்படுத்த ஆசிரியா் அறிவுறுத்தல்:பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ‘ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி’ மற்றும் துருக்கி சிா்ட் பல்கலைக்கழகம் சாா்பில், வளா்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கான பயன்பாட்டு கணித அறிவியல் ... மேலும் பார்க்க

மருந்தாளுநா்களுக்கான விழிப்புணா்வு பயிலரங்கு

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவ மனையில்லாத மருந்தகம், மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் மருந்தகம் மற்றும் மருந்தாளுநா்களுக்கு மகப்பேறு உயிரிழப்பைத் தடுப்பதற்கான யுக்திகள் குறித்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் 560 வழக்குகளுக்கு தீா்வு

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 560 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் தேசிய மக்... மேலும் பார்க்க