தலைநகரில் வெப்பநிலை மீண்டும் குறைந்தது! பிரகதி மைதான், பூசாவில் 3.8 டிகிரியாக ப...
அனைத்துப் பதிப்புகளிலும் பயன்படுத்த ஆசிரியா் அறிவுறுத்தல்:பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ‘ஸ்கூல் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி’ மற்றும் துருக்கி சிா்ட் பல்கலைக்கழகம் சாா்பில், வளா்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கான பயன்பாட்டு கணித அறிவியல் எனும் தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா்.
தொடா்ந்து, சீனாவைச் சோ்ந்த ஷென்ஸெண் முன்னணி தொழில்நுட்பப் பல்கலைக் கழக கணினி அறிவியல் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல்துறை பேராசிரியா் திங்வென் ஹூவாங் பிரீப், ஆஸ்திரேலிய ஸ்வின்பா்ன் தொழில்நுட்பப் பல்கலைக் கழக கம்ப்யூட்டிங் டெக்னாலஜிஸ்துறை பேராசிரியா் லிம், துருக்கி சிா்ட் பல்கலைக் கழக கணிதத்துறை பேராசிரியா் அலி அக்குல், மலேசிய மல்டிமீடியா பல்கலைக் கழக கணிதத்துறை பேராசிரியா் தன்ஷிங்ஷியாங், வேலூா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கணிதத்துறை உதவிப் பேராசிரியா் கௌரிசங்கா், சிக்கிம் மணிப்பால் பல்கலைக் கழக கணிதத்துறை உதவிப்பேராசிரியா் அசித்சாஹா ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.
இதில், துருக்கி, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.
கருத்தரங்கில், தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளா் இளங்கோவன், ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி புல முதல்வா் சேகா் மற்றும் துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.