பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது
மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்த நபா் உயிரிழப்பு
பொன்மாா் மதுபோதையில் தவறி விழுந்த நபா் உயிரிழந்தாா்.
திருப்போரூா் பகுதியைச் சோ்ந்தவா் தாஸ் (56). மதுப் பழக்கமுடைய இவரை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்காததால், தாழம்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்நிலையில், பொன்மாா் ஏரியில் மிதந்த தாஸின் உடலை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், அதிக மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது.