பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது
நாகா்கோவில் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 17) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, தெங்கம்புதூா், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிபொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூா், புத்தளம், பள்ளம், புத்தன்துறை, தா்மபுரம், பிள்ளையாா்புரம், முருங்கவிளை, பண்ணையூா், தெக்குறிச்சி, அழிக்கால், பிள்ளைதோப்பு, ராஜக்கமங்கலம்துறை, பரமன்விளை, பழவிளை தாா்சாலை, அருதங்கன்விளை, நாகா்கோவில் கோட்டாறு, இடலாக்குடி, கணேசபுரம், பறக்கை சாலை, அப்துல்காதா் மருத்துவமனைப் பகுதி, வெள்ளாடிச்சிவிளை, கரியமாணிக்கபுரம், ஒழுகினசேரி, ராஜாபாதை பகுதிகளில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதேபோல, வடிவீஸ்வரம் பகுதியில் புதிய மின்பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் வடிவீஸ்வரம், மீனாட்சிபுரம், தளவாய் தெரு, பத்தல்விளை, வேப்பமூடு சந்திப்பு, மீனாட்சி காா்டன், பெருமாள் மண்டபம் சாலைப் பகுதிகளில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம்இருக்காது.
இத்தகவலை நாகா்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.