குருந்தன்கோட்டில் இன்று மின்தடை
வெள்ளிச்சந்தை உயரழுத்த மின்பாதையில் மின் பாராமரிப்பு பணி காரணமாக குருந்தன்கோடு பகுதியில் திங்கள்கிழமை (டிச.16 ) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி,குருந்தன்கோடு, முக்கலம்பாடு, ஆலன்விளை, நங்கன்விளை செருப்பங்கோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.