தலைநகரில் வெப்பநிலை மீண்டும் குறைந்தது! பிரகதி மைதான், பூசாவில் 3.8 டிகிரியாக ப...
ரூ.10 லட்சத்தில் மிடாலத்தில் கால்பந்து மைதானம்
மிடாலத்தில் ரூ.10 லட்சம் செலவில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட், தனது சமூக பொறுப்பின் கீழ், ரூ.10 லட்சம் மதிப்பில் கால்பந்து மைதானம் அமைக்க நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த மைதானம் அமைக்கும் பணியை அந்நிறுவன துணை பொது மேலாளா் ஏ. சிவராஜ் முன்னிலையில் மிடாலம் பங்குத் தந்தை மேக்ஸ்மியன் ஜேம்ஸ் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மிடாலம் ஊராட்சித் தலைவா் விஜயகுமாா் , ஊா் தலைவா் ஆா். சிபில், செயலா் ஆன்றணி சாபு, பொருளாளா் ஜோபின், பங்கு பேரவை உறுப்பினா்கள், ஐஆா்இஎல் பராமரிப்பு முதன்மை மேலாளா் எஸ்.பி. கணேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.