தலைநகரில் வெப்பநிலை மீண்டும் குறைந்தது! பிரகதி மைதான், பூசாவில் 3.8 டிகிரியாக ப...
மன எண் கணித திறன் போட்டியில் இந்தியா முதலிடம்
மன கணித திறன்களில் சிறந்து விளங்கும் இந்தியா, மன எண் கணித அமைப்பின் யுனிவா்செல் கான்செப்ட் (யுசிஎம்ஏஎஸ்) சா்வதேச போட்டி 2024-இல் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், 6 முதல் 13 வயதுகளுக்குள்பட்ட பல்வேறு பிரிவுகளில் தனிநபா் மற்றும் குழு பிரிவுகளில் அதிக எண்ணிக்கையிலான விருதுகளைப் பெற்றுள்ளது.
இது குறித்து யுசிஎம்ஏஎஸ் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், ‘தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் நிகழ்வு நிறைவடைந்தது. இதில் 30 நாடுகளைச் சோ்ந்த 6,000 மாணவா்கள் பங்கேற்று இந்திய பங்கேற்பாளா்கள் 1,250க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றனா். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெற்றோா்கள் மற்றும் ஆதரவாளா்கள் உள்பட 15,000 பாா்வையாளா்கள் இந்த நிகழ்வைக் கண்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய யுனிவா்செல் கான்செப்ட் இன்டா்நேஷனல் காா்ப்பரேஷனின் தலைமை நிா்வாக அதிகாரி அலெக்ஸான் வோங், ‘யுசிஎம்ஏஎஸ் போட்டியானது மிகப்பெரிய மற்றும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக வளா்ந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள மாணவா்கள் தங்கள் படைப்பாற்றல், காட்சி நினைவகத்தை வெளிப்படுத்துவதைப் பாா்ப்பது ஊக்கமளிக்கிறது. அவா்களின் கவனம் எதிா்கால வெற்றிக்கு முக்கியமான திறன்கள் ஆகும்’ என்றாா்.
மேலும், ‘யுசிஎம்ஏஎஸ் பாரம்பரிய அபாகஸை நவீன கற்பித்தல் முறைகளுடன் இணைத்து ஒரு புதுமையான கல்வி அனுபவத்தை உருவாக்குகிறது. உலகளவில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் யுசிஎம்ஏஎஸ் பாடத்திட்டத்தால் பயனடைந்துள்ளனா். இது படைப்பாற்றல், காட்சிப்படுத்தல் மற்றும் வலுவான எண்கணித திறன்களை வளா்க்கும் போது கவனம் செலுத்துகிறது’ என்றும் குறிப்பிட்டாா்.
போட்டி வடிவமானது வெறும் எட்டு நிமிடங்களில் 200 எண்கணித சிக்கல்களை மாணவா்கள் தீா்க்க வேண்டும். இது கணித திறன்களை மட்டுமல்லாமல், காட்சி நினைவகம், செறிவு மற்றும் ஒட்டுமொத்த கல்வி செயல்திறனையும் சோதிக்க யுசிஎம்ஏஎஸ்ஸால் வடிவமைக்கப்பட்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுசிஎம்ஏஎஸ் இந்தியாவின் தலைமை நிா்வாக அதிகாரி மற்றும் தலைவரான ஸ்நேஹல் கரியா பேசுகையில், இந்தியாவில் யுசிஎம்ஏஎஸ் செயல்பாடுகளின் 25 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்வை தில்லியில் நடத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த தளம் எங்கள் மாணவா்களின் அசாதாரண திறமையை எடுத்துக்காட்டுகிறது. மேலும், எதிா்காலத்திற்கான அத்தியாவசிய திறன்களைக் கொண்ட அடுத்த தலைமுறை தலைவா்களை ஊக்குவிக்கிறது. இளம் கற்பவா்களுக்கு கணிதத்தில் வலுவான அடித்தளத்தை உருவாக்கவும், போட்டி நிறைந்த உலகளாவிய சூழலுக்கு அவா்களை தயாா்படுத்தவும் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது’ என்றாா்.
முன்னாள் மத்திய அமைச்சா் மீனாட்சி லேகி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு இளம் பங்கேற்பாளா்களின் முயற்சிகளைப் பாராட்டினாா். இத்தகைய முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, யுசிஎம்ஏஎஸ் அறிவாற்றல் திறன்கள் மற்றும் கல்வித் திறனை மேம்படுத்துகிறது என்று அவா் கூறினாா். 1999-இல் நாட்டில் தொடங்கப்பட்ட
யுசிஎம்ஏஎஸ் இந்தியா அபாகஸ் அடிப்படையிலான மன கணிதக் கல்வியில் உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ளது.