UGC: 'ஓராண்டுக்கு முன்பே படிப்பை முடிக்கலாம்' - யுஜிசியின் புதிய நடைமுறை சொல்வது...
தில்லியில் போராட்டத்தைத் தொடங்கும் விவசாயிகள்! பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் இன்று போராட்டத்தைத் தொடங்குகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா எல்லையில் இருந்து தில்லி நோக்கி விவசாயிகள் நடைப்பயணத்தைத் தொடங்கவுள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்தையடுத்து தில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 5,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஹெச். ராஜாவுக்கு இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறை!!
தில்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசுகையில்,
'விவசாயிகளுடன் பேச அரசு தயாராக உள்ளது. கடந்த முறை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த வேளாண் சட்டங்களை அரசு யும் எந்தவித நிபந்தனையும் இன்றி திரும்பப் பெற்றது.
மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியானது விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட முயற்சிக்கிறது' என்றார்.
கடந்த 2020ல் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தில்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021ல் 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும் இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை.
இதனை வலியுறுத்தியே விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்குகின்றனர். தில்லியிலே முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடரவிருப்பதாகக் கூறப்படுகிறது.