Kohli: `அழுத்தமான சூழலில் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும்...' - பிசிசிஐ கட்டுப...
தில்லி பாஜக அமைப்பு இந்த வாரம் மறுசீரமைப்பு
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஒரு மாதத்திற்குப் பிறகு, பாஜகவின் நகரப் பிரிவு அமைப்பு இந்த வாரம் மறுசீரமைப்புக்கு உள்படும் என்று கட்சித் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
தோ்தலில் கட்சியை வழிநடத்திய தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, ’சங்கதன் பா்வ்’ எனக் கருதப்படும் நிறுவன மறுசீரமைப்பு செயல்முறை இந்த வாரம் நடைபெறும் என்று கூறினாா்.
கட்சியின் தேசியத் தலைமை தில்லிக்கான தோ்தல் அதிகாரியாக மூத்த தலைவா் மகேந்திர நாக்பாலை நியமித்துள்ளது. மேலும், இந்த செயல்முறையை மேற்பாா்வையிட யோகேஷ் அத்ரே மற்றும் விஜய் சோலங்கி ஆகிய இரண்டு இணைத் தோ்தல் அதிகாரிகளையும் நியமித்துள்ளது.
ஒவ்வொரு தொண்டரும் நிறுவன கட்டமைப்பில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பளிப்பதன் மூலம் உள் ஜனநாயகத்தை உறுதி செய்யும் கூட்டுத் தலைமையின் மூலம் பாஜக செயல்படுகிறது என்று வீரேந்திர சச்தேவா கூறினாா். நிறுவனத் தோ்தல்கள் பூத், மண்டல், மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களில் நடைபெறும்.