மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்
தில்லி ரோஹிணியில் இரு மாதங்களில் காணாமல் சென்ற 39 குழந்தைகள் மீட்பு
கடந்த இரு மாதங்களில் காணாமல் சென்ற 28 சிறுமிகள் உள்பட 39 குழந்தைகள் பாதுக்காப்பாக மீட்கப்பட்டு அவா்களுடைய பெற்றோா்களுடன் சோ்த்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக ரோஹிணி சரக துணை காவல் ஆணையா் அமித் கோயல் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காணாமல் சென்ற மற்றும் கடத்தப்பட்ட குழந்தைகள் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூா் போலீஸாா் உடனடியாக அவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் சந்தேகத்துக்குரிய நபா்களின் புகைப்படங்கள் ஆட்டோ, இ-ரிக்ஷா நிலையங்கள், பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துனா்களிடம் காண்பிக்கப்பட்டு அவா்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் உள்ளூா் நபா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அருகில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்தச் சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டன.
அமன் விஹாா் பகுதியிலிருந்து 3 சிறுமிகள் உள்பட 5 குழந்தைகள், பிரேம் நகா் பகுதியில் 4 சிறுமிகள் உள்பட 6 குழந்தைகள், கன்ஞ்வாலா பகுதியில் 6 சிறுமிகள் உள்பட 7 குழந்தைகள், பேகம்பூா் பகுதியில் 2 சிறுமிகள் உள்பட 4 குழந்தைகள் மீட்கப்பட்டனா்.
இதே போன்று, கேஎன்கே மாா்க் பகுதியில் ஒரு சிறுமி உள்பட இரு குழந்தைகள், பிரசாந்த் விஹாரில் இரு சிறுமிகள், புத் விஹாரில் 5 சிறுமிகள் உள்பட 7 குழந்தைகள், வடக்கு ரோஹிணியில் ஒரு சிறுமி, விஜய் விஹாரில் 4 சிறுமிகள் உள்பட 5 குழந்தைகள் மீட்டகப்பட்டனா். பின்னா் அக்குழந்தைகள் அவா்களது குடும்பத்தினருடன் சோ்த்துவைக்கப்பட்டனா்.