செய்திகள் :

தீவைக்கும் முன் கொடூரமாக துன்புறுத்தப்பட்ட மணிப்பூர் பெண்: உடல் கூறாய்வு அறிக்கை

post image

மணிப்பூரில், கடந்த வாரம், மூன்று குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிருடன் தீ வைத்து எரிக்கப்படுவதற்கு முன்பு, கொடூரமாக துன்புறுத்தப்பட்டிருப்பதாக உடல் கூறாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் பகுதியில் நவம்பர் 7ஆம் தேதி நுழைந்து சமூக விரோதிகள் சிலர், ஒரு வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணை தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து, துன்புறுத்தி, உடலில் தீ வைத்து எரித்துள்ளனர்.

மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில் தீக்கிரையான பெண்ணின் உடல், அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் மருத்துவக் கல்லூரியில் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. பெண்ணின் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையானதால், பாலியல் வன்கொடுமை குறித்து உறுதி செய்ய இயலாமல் போனதாகக் கூறப்படுகிறது. மணிப்பூர் பெண்ணின் உடல் 99 சதவீதம் எரிந்துவிட்டிருந்ததாகவும், அவரது எலும்புகள் கூட கரிக்கட்டையாகியிருந்ததாக உடல்கூறாய்வு தெரிவிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் இருந்துள்ளதும், முகத்தின் அமைப்பே சிதைந்து, கை மூட்டுகள் சிதைந்துபோயிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த உடல் கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள், கொல்லப்படுவதற்கு முன்பு, அப்பெண் அனுபவித்த கொடூரமான துன்புறுத்தல்களையும் வலியையும் உணர்த்துவதாக உள்ளது.

இதுவரை கொலையாளிகள் அடையாளம் காணப்படவில்லை. சம்பவத்தின்போது, கணவரும், அவரது பிள்ளைகளும் எங்கிருந்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வன்முறையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையின் உச்சக்கட்டமாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பும் ஏராளமான பெண்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டிருந்தாலும், இந்த சம்பவம் கேட்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் மோடி பயணித்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

புது தில்லி: ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி பயணித்த சிறிய ரக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி பயணித்த சிறிய ரக விமானத்தில் ஏற்பட்ட தொழில்... மேலும் பார்க்க

மண்டல பூகைக்காக சபரிமலை நடைதிறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக இன்று மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.கேரளத்தின் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதந்தோறு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ஹெலிகாப்டரில் சோதனை

மகாராஷ்டிரத்தில் பிரசாரத்துக்கு சென்றபோது மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி ... மேலும் பார்க்க

700 கிலோ போதைப்பொருளுடன் பிடிபட்ட ஈரானியப் படகு! 8 பேர் கைது

குஜராத்தில் நடுக்கடலில் 700 கிலோ போதைப்பொருளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்த படகு பிடிபட்டது.போதைப்பொருள் கடத்தலில், 700 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற ஈரானியப் படகு குஜராத்தின் போர்பந... மேலும் பார்க்க

ஹரியாணாவில் 1500 கிலோ எடையில் எருமை.. உலர் பழங்கள், 20 முட்டை உணவு!

ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஒரு எருமை 1500 கிலோ எடையில் இருக்கிறதாம். நாள்தோறும் இதற்கு உலர் பழங்கள், 20 முட்டைகள் வழங்கப்படுகிறது.இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் வேளாண்துறை கண்காட்சியில் பல்வேறு வகையா... மேலும் பார்க்க

டேஹ்ராடூன் கோர விபத்து: விருந்து, அதிவேகம், நொறுங்கிய கார்: 6 பேர் பலி

டிரக்டேஹ்ராடூனில், விருந்துக்குச் சென்று திரும்பியவர்களின் இரவுப் பயணம் மிகக் கொடூரமான விபத்தில் முடிந்துள்ளது. இதில் காரில் வந்த 6 இளம் உயிர்கள் பறிபோனது.அதிகவேகத்தில் வந்த எம்யுவி கார், சாலையில் கண்... மேலும் பார்க்க