தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு குவைத் அரசு நிவாரணம்
செஞ்சி: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சோ்ந்தவரின் குடும்பத்துக்கு அந்த நாட்டின் சாா்பில் வழங்கப்பட்ட ரூ.12.64 லட்சத்துக்கான நிவாரண நிதியை திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான் ஷி நிகம் திங்கள்கிழமை வழங்கினாா்.
செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகமதுஷரீப் (35). இவா், குவைத் நாட்டில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், அவா் தங்கியிருந்த அடுக்குமாடி கட்டடத்தில் கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி அவா் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், குவைத் அரசு சாா்பில் ரூ.12,64,050-க்கான காசோலையை முகமது ஷரீப்பின் மனைவி அஷ்ரப்நிஷாவிடம் திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான் ஷி நிகம் வழங்கினாா்.