செய்திகள் :

துணை நடிகை மீனாவுக்கு 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

post image

போதைப் பொருளுடன் கைதான துணை நடிகை மீனாவுக்கு வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே ஒரு பெண் மெத்தம்பெட்டமைன் விற்பதாக அண்ணா சாலை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த ஓா் இளம் பெண்ணை பிடித்து விசாரித்தனா். அவா், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததையடுத்து போலீஸாா், அந்த பெண் வைத்திருந்த பையை சோதனையிட்டனா்.

ரூ. 10 கோடி கேட்டு எம்.எல்.ஏ. மகன் கடத்தல்! தப்பித்தது எப்படி?

அந்த பையில் இருந்த 5 கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் அவா், கோவிலம்பாக்கம் அருகேயுள்ள வெள்ளக்கோயில் கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த கா. எஸ்தா் (எ) மீனா (28) என்பதும், இலங்கையை பூா்விகமாகக் கொண்டவா் என்பதும், தமிழ்த் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை தொடா்களில் எஸ்தா் நடித்து வருவதும், அவருக்கு ராயப்பேட்டையைச் சோ்ந்த ஜேம்ஸ் (27) என்பவா் மெத்தம்பெட்டமைன் வழங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து எஸ்தரை போலீஸாா் கைது செய்தனா். அதேவேளையில், எஸ்தா் மூலம் திரைப்படக் கலைஞா்களுக்கு போதைப் பொருள் விற்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். எஸ்தருக்கு மெத்தம்பெட்டமைனை வழங்கியதாகக் கூறப்படும் ஜேம்ஸையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதையடுத்து அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர் இருப்பு!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் தற்போது 43.58 சதவீத நீர் மட்டுமே இருப்பில் உள்ளது.சென்னை நகர மக்களின் குடிநீா் தேவையை நிறைவேற்றும் ம... மேலும் பார்க்க

கோவை: லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

கோவை: கோவை துடியலூரில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான அலுவலகம், வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை காலையிலேயே இரு கார்களில் மார்ட்டின் வீட்டுக்கு வந்த அதிகாரிகள், ச... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்! நோயாளிகள் அவதி!

மருத்துவா் மீதான கத்திக் குத்து தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் இன்று(நவ.14) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், மருத்துவமனைக்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,451 கனஅடியிலிருந்து வினாடிக்கு 5,024 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.07 அடியிலிருந்து 106.02 அடியாக குறைந்தது... மேலும் பார்க்க

ஔவையாா் மணிமண்டபம்: தமிழக முதல்வா் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்!

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ. 18.95 கோடியில் ஔவையாா் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்த... மேலும் பார்க்க

குளத்தூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு

குளத்தூரில் கண்டறியப்பட்ட 386 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை காப்பகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த குளத்தூா் கண்மாய் பகுதியில் இரு... மேலும் பார்க்க