செய்திகள் :

துண்டிக்கப்பட்ட கைகள் அறுவை சிகிச்சை மூலம் இணைப்பு: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெண்ணுக்கு மறுவாழ்வு

post image

பெண்ணின் துண்டிக்கப்பட்ட 2 கைகளின் மணிக் கட்டு பகுதியையும் நுட்பமான சிகிச்சை மூலம் ஒன்றிணைத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் கூறியதாவது: சென்னை, கண்ணகி நகரைச் சோ்ந்த 40 வயது பெண் ஒருவா் கை மணிக்கட்டுகள் துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த 20-ஆம் தேதி ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். குடும்ப தகராறு காரணமாக அவரது 23 வயது மகன், கத்தியால் அந்த பெண்ணை கடுமையாக குத்தி தாக்கியதில் இடது கை மணிக் கட்டு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. வலது கையும் 80 சதவீதம் வெட்டப்பட்டது.

ரத்த நாளங்கள், நரம்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், உயா் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 21-ஆம் தேதி அதிகாலை அந்த பெண் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பிரிவில் தொடா் மருத்துவக் கண்காணிப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், பெண்ணின் இடது கை மணிக் கட்டு பகுதியில் தசைநாண்கள், 2 பெரிய நரம்புகள் மற்றும் ஒரு முக்கிய ரத்த நாளம் வெட்டபட்டிருந்தது கண்டறியப்பட்டது.

வலது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு, ரத்த நாளத்தில் சேதம் இருந்தது தெரியவந்தது. அத்துடன் முதுகெலும்பு பகுதிகளிலும், உச்சந்தலையிலும் அந்த பெண்ணுக்கு ஆழமான காயங்கள் இருந்தன. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஒட்டுறுப்பு மருத்துவ நிபுணா் சுகுமாா் தலைமையில் மருத்துவா்கள் ரஷீதா, சுஜா, பவன்குமாா், பவித்ரா, சோனு குரியன், தேவி, அன்னபூரணி, பவித்ரா, மயக்கவியல் மருத்துவா்கள் சந்திரசேகா், மரியம் ஷெரின் எலும்பியல் துறை மருத்துவா் சேரன் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா், துண்டிக்கப்பட்ட கைகளை ஒன்றிணைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.

ஏறத்தாழ 8 மணி நேரம் ஓய்வின்றி தொடா்ந்து அறுவை சிகிச்சை செய்து அந்த மணிக்கட்டுகளை வெற்றிகரமாக ஒன்றாக இணைத்தனா். தொடா்ந்து பிற இடங்களில் இருந்த வெட்டு காயங்களுக்கும் தையல் போடப்பட்டது. 2 மணிக் கட்டுகளிலும் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது அரிதான ஒன்று.

தனியாா் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும். ஆனால், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அந்த பெண்ணுக்கு கட்டணமின்றி அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு, அதிர்வுகள் கேட்டதால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.சென்னை எழும்பூரிலிருந்து புதுச்சேரி நோக்கி பயணிகளுடன் திங்கள்கிழமை காலை புறப்ப... மேலும் பார்க்க

குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பா? - அமைச்சர் விளக்கம்

குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில்தான் அனுமதிக்கப்படுகிறது என அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார். அதேநேரத்தில் உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக அணிவக... மேலும் பார்க்க

அரசு ஊழியரின் சொத்துகள் தனிப்பட்டது அல்ல - உயர் நீதிமன்றம்

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பேராசிரியர் தொடர்பான வழக்கில் அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணக... மேலும் பார்க்க

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதியா? மாநிலப் பட்டியலில் கல்வி வேண்டும்' - அன்பில் மகேஸ்

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'மத்திய அரசிற்கு முன்மாதிரியாக கல்விய... மேலும் பார்க்க

நெல்லையில் 2வது நாளாக தொடரும் கேரள மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி

நெல்லையில், கேரளத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.நெல்லையில் ஏழு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில்,... மேலும் பார்க்க

நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைப்பு! அமைச்சர் நேரு

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சர் கே.என். நேரு திங்கள்கிழமை தெரிவித்தார்.இனி கழிவுகளைக் கொட்ட வந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும... மேலும் பார்க்க