செய்திகள் :

தும்மல், காய்ச்சல், உடல் வலி... பயப்பட வேண்டுமா? - மருத்துவர் சொல்வதென்ன?

post image

ஊரெங்கும் ஒரே தும்மலும், காய்ச்சலுமாக இருக்கிறது. சிலர், 'உடலெல்லாம் வலிக்கிறது' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் 'காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது' என டெங்கு பரிசோதனை செய்துகொள்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன; இது என்ன காய்ச்சல் என்று சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷிடம் கேட்டோம்.

''கடந்த சில மாதங்களாகவே பருவகால மாற்றத்தால் வருகிற காய்ச்சலுடன் வைரல் மூச்சுப்பாதைத் தொற்று, சிக்கன் குனியா மற்றும் ஆங்காங்கே டெங்கு என மூன்று வகையான காய்ச்சல் தமிழகமெங்கும் இருக்கிறது'' என்றவர், அதன் அறிகுறிகள், தீர்வுகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொண்டார்.

காய்ச்சல்

வைரல் மூச்சுப்பாதைத் தொற்றும் காய்ச்சலும்...

இந்தப் பிரச்னையில் இருமல், தும்மல், கை-கால் வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தும்மல் அதிகமாக வருகிறது என்பதால், அதன் மூலமாகவே மற்றவர்களுக்கும் பரவி வருகிறது. அதனால், மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள். மற்றவர்கள், கொஞ்ச நாளைக்கு மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களைத் தவிருங்கள். மற்றபடி, பயப்பட தேவையில்லை.

இன்னொரு தகவல். சிலருக்கு வைரஸ் தொற்றால் வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. இவர்கள், ஓ.ஆர்.எஸ் கரைசல் குடித்து உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சோர்வாக உணரும்பட்சத்தில், உடனே மருத்துவரை பார்த்துவிடுவது நல்லது.

சிக்கன் குனியா...

இதில், முதலில் காய்ச்சல் வரும். கூடவே லேசாக உடல் வலியும் இருக்கும். இந்தப் பிரச்னையில் சளி, இருமல், தும்மல் பெரியளவில் இருக்காது. காய்ச்சல்கூட பொதுவாக ஒன்றிரண்டு நாள்கள்தான் இருக்கும். சிலருக்கு ஒருநாள் மட்டுமே இருக்கும். சிலருக்கு மட்டும் 3 முதல் 4 நாட்கள் வரை இருக்கும். காய்ச்சல் சரியான பிறகுதான், உடலின் ஜாயின்ட்களில் வலி வர ஆரம்பிக்கும். இந்த வலி பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு வாரம் அல்லது பத்து நாளில் சரியாகி விடும். சிலருக்கு மட்டும் 2 அல்லது 3 மாதம் அல்லது அதற்கு மேலும்கூட வலி இருக்கும். காய்ச்சல் வந்தவுடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டாலே போதும். இந்தக் காய்ச்சலுக்கும் பயப்பட தேவையில்லை.

டெங்கு

டெங்கு...

டெங்கு வந்தால், காய்ச்சல் அடிக்கும். கூடவே கண்களுக்குள்ளும் வயிற்றின் மேல் பகுதியிலும் வலி இருக்கும். டெங்கு காய்ச்சல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருந்து, நடுவில் ஒருநாள் இருக்காது. பிறகு மறுபடியும் காய்ச்சல் வரும். இந்தக் காய்ச்சலும் பெரும்பான்மையானவர்களுக்கு பெரியளவில் தொல்லைக் கொடுக்காது. மருத்துவரைப் பார்த்து மாத்திரை எடுத்துக்கொண்டாலே சரியாகி விடும்.

டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு, காய்ச்சல் ஆரம்பித்த 5-வது நாளில் இருந்து 7-வது நாளில் தட்டணுக்கள் (பிளேட்லெட்ஸ்) குறைய ஆரம்பிக்கும். டெங்கு வந்தால் பெரும்பாலும் 5-வது நாள் காய்ச்சல் சரியாகி விடும். தட்டணுக்கள் குறைவது நபருக்கு நபர் மாறுபடும். நார்மலாக இருப்பவர்களுக்கு, ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில் 1.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை தட்டணுக்கள் இருக்கும். இது சிலருக்கு ஒரு லட்சத்திலிருந்து 80 ஆயிரம் வரை மட்டுமே குறையும். இன்னும் சிலருக்கு 70 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரைக்கும் குறையும். ஒருசிலருக்கு 20 ஆயிரத்துக்கும் கீழ் தட்டணுக்கள் குறையும். டெங்கு காய்ச்சலுக்கு பயப்பட வேண்டியதில்லை. ஆனால், தட்டணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக குறைந்தால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த தட்டணுக்கள்தான் உடலில் ரத்தம் வெளியேறக்கூடிய இடங்களில் அப்படி நிகழாமல் ரத்தத்தை உறைய வைக்கும். தட்டணுக்கள் குறையும்போது, ஒருசிலருக்கு உடல் உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்படலாம். அதனால், டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை மருத்துவருடைய ஆலோசனை மிக மிக அவசியம். வெறும் மாத்திரைகள் மட்டும் போதுமா அல்லது நரம்பு வழியாக திரவம் ஏற்ற வேண்டுமா அல்லது தட்டணுக்கள் ஏற்ற வேண்டுமா என மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

அதனால், டெங்கு காய்ச்சல் வந்தாலோ அல்லது விட்டு விட்டுக் காய்ச்சல் வந்தாலோ, காய்ச்சல் வந்த 5-வது நாளில் இருந்து கவனமாக இருக்க வேண்டும். வாந்தி, பசியின்மை, உடலில் நீர்ச்ச்சத்து குறைதல், மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால், பாதிக்கப்பட்டவர் கஞ்சி, பழச்சாறு, இளநீர் என அருந்தி உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொது மருத்துவர் ராஜேஷ்

கவனமாக இருக்க வேண்டியவை...

பருவ கால மாற்றத்தால் வருகிற காய்ச்சலுக்கு, மருந்து, மாத்திரை, ஓய்வு போதும். சிக்கன் குனியா, டெங்கு ஆகிய இரண்டுமே கொசுக்களால் வருவதால், வீட்டைச் சுற்றி சிரட்டைகளில், பிளாஸ்டிக், கல்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மலேரியாவை ஏற்படுத்தும் கொசுக்கள் இரவில் கடிக்கும். சிக்கன் குனியா, டெங்கு ஏற்படுத்தும் கொசுக்களோ பகலில் கடிக்கும். அதனால், பகல் நேரங்களில் உடல் முழுவதும் மறையும்படி உடை உடுத்திக்கொள்ளுங்கள். மற்றபடி, எந்தக் காய்ச்சலுக்கும் நீங்கள் பயப்பட தேவையில்லை.''

MIOT: அறுவை சிகிச்சை மீதான அச்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி; ரோபோடிக் அறுவை சிகிச்சை

மியாட் மருத்துவமனை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து நோயாளிகளுக்குச் சிறந்த பராமரிப்பை வழங்குவதற்கும், அவர்களது விளைவுகளை மேம்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.இன்றைய உலகில் அதிந... மேலும் பார்க்க

Doctor Vikatan: 'பிக் பாஸ்' போட்டியாளர் சௌந்தர்யாவின் குரல் பிரச்னை... தீர்வு உண்டா?

Doctor Vikatan:விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சௌந்தர்யா என்பவருக்கு குரல் தொடர்பான பிரச்னை இருக்கிறது. அவர் இருவிதமான குரல்களில் பேசுகிறார். சிறுவயதில் தன் குரலை வைத... மேலும் பார்க்க

Health: மல்டி வைட்டமின் மாத்திரைகள்... யார், எவ்வளவு நாள்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?!

பொதுவாக நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உணவில் இருந்தே கிடைக்கும். அப்படி உடலுக்கு தேவையான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்காதபட்சத்தில் மல்டி வைட்டமின் மாத்திரைகளை சிலர் எடுத்துக்கொள்வார்கள். மல்டி ... மேலும் பார்க்க

புற்றுநோய்கள் வராமல் தடுக்குமா கொழுப்பு அமிலங்கள்? - ஆய்வு முடிவு சொல்வதென்ன?

ஆரோக்கியமான கொழுப்புகள் என்று அழைக்கப்படும் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 ஆகிய கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ள உணவுகள் மனிதனின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தவிர,... மேலும் பார்க்க

`எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாமல் பேப்பரில் ஜெராக்ஸ்; இதுவே சாட்சி’ - சாடும் அதிமுக மருத்துவரணி

"தென்காசியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு ஒருவர் எக்ஸ்ரே எடுத்ததற்கு, எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாமல் பேப்பரில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ளனர். அந்தளவுக்கு சுகாதாரத் துறை உள்ளது" என்ற... மேலும் பார்க்க

குழந்தைகளை மரியாதையாக நடத்துவதால் கிடைக்கும் பலன்கள் தெரியுமா? - மனநல மருத்துவர் சொல்லும் டிப்ஸ்

'உங்கள் குழந்தைகளுக்கு மரியாதை கொடுங்கள்' என்று யாராவது உங்களிடம் சொன்னால், உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? 'யெஸ், நான் எங்க பிள்ளைகளை வாங்க, போங்கன்னு மரியாதை கொடுத்துதான் பேசுவோம்' என்பீர்களா. ... மேலும் பார்க்க