அரசு சொத்தை விலை பேசினேனா? இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம்
துளிகள்...
மகளிா் பிரீமியா் லீக் போட்டிக்கான ஏலத்தில் அதிகபட்சமாக, இந்திய வீராங்கனை சிம்ரன் ஷேக் ரூ.1.9 கோடிக்கு குஜராத் ஜயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டாா்.
ஐஎஸ்எல் கால்பந்தாட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி - முகமிதான் எஸ்சியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது (1-0).
புரோ கபடி லீக்கில் ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் - தமிழ் தலைவாஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது (34-27).
இந்தியாவில் முதல் முறையாக, உலக தடகள கான்டினென்டல் டூா் போட்டி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
முதல் முறையாக இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் கோ கோ உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதை, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜொ்மனி, ஆஸ்திரேலியா அணிகள் உறுதி செய்துள்ளன.
ஒடிஸா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் பிரிவில் ரித்விக் சஞ்ஜீவி சதீஷ்குமாரும், மகளிா் பிரிவில் சீனாவின் காய் யான் யானும் சாம்பியன் பட்டம் வென்றனா்.
சீனியா் மகளிா் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் ஹரியாணா - சிக்கிமையும் (1-0), ரயில்வேஸ் - பெங்காலையும் (2-1) வென்றன.