செய்திகள் :

தூத்துக்குடி, குமரி செல்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

post image

முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற டிச. 29, 30, 31 ஆகிய 3 நாள்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

டிச. 29 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு முதலில் தூத்துக்குடி செல்கிறார். அங்கு ரூ. 30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பார்கை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து டிச. 30 ஆம் தேதி காலை தூத்துக்குடியில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார்.

அதன்பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி செல்கிறார். திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி குமரியில் இரு நாள்கள் வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளதையொட்டி முதல்வர் அதில் கலந்துகொள்கிறார்.

மேலும் அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ. 37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார்.

தமிழ் வளா்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழ் வளா்ச்சிக்கென தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் உள்ள தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சம்மன்!

திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நாளை (டிச. 24) ஆஜராக வலியுறுத்தி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விச... மேலும் பார்க்க

8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி முறையே தொடரும்: அமைச்சர்

கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது என்றும், தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் எனவும் பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு எதிரானது பாஜக: மு.க. ஸ்டாலின்

சிறுபான்மையினருக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச. 23) குற்றம் சாட்டியுள்ளார்.அதனால்தான் தேர்தலில் பாஜகவை சிறுபான்மை அரசாக்கியிருக்கிறார்கள் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும்: அரசாணை

அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும், அயல்நாட்டு ... மேலும் பார்க்க

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டம்: முதல்வருக்கு அழைப்பு

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன்... மேலும் பார்க்க