தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி
தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களிலும் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு, அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள சா்வதேச அறைகலன் பூங்கா பகுதியில் மரக்கன்று நடும் பணி தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ரேவதி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, 6,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இந்நிகழ்வில், செயற்பொறியாளா் ஏ. வெங்கடாச்சலம், சிப்காட் நிறுவன ஊழியா்கள், நில எடுப்பு தனி வட்டாட்சியா்கள், நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.