செய்திகள் :

தூத்துக்குடி மீனவர்கள் விவகாரம்: ராஜ்நாத் சிங்குடன் கனிமொழி சந்திப்பு!

post image

லட்சத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

தில்லியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசிய கனிமொழி, இதுகுறித்த கடிதத்தையும் அளித்தார்.

இதுதொடர்பாக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,

'தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கவும்,

குஜராத் போர்பந்தர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல்போன தூத்துக்குடி அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துக் கேட்டுக் கொண்டேன்' என்று பதிவிட்டுள்ளார்.

கார்கேவும் ராகுலும் செவ்வாய் கிரகம் சென்று விடுங்கள்: பாஜக

மகாராஷ்டிரப் பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி ஏற்படுத்தப்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர சட்டப்பேர... மேலும் பார்க்க

ரூ. 1.7 டிரில்லியன் கடன் தள்ளுபடி! ஆனால், பயனில்லை!!

நிதியாண்டு 2024-ல் ரூ. 1.7 டிரில்லியன் கடனை இந்திய வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த தரவுகளின்படி, இந்திய வங்கிகள் 2023-24 நிதியாண்டில் ரூ. 1... மேலும் பார்க்க

முதல்வர் யார்? பிரதமர் மோடி, அமித் ஷாவின் முடிவை ஏற்போம்: சிவசேனை

மகாராஷ்டிர முதல்வர் யார் என்ற விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்வோம் என சிவசேனை எம்.பி. பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். மகா... மேலும் பார்க்க

தலித் இளைஞர் அடித்தே கொலை! கிணற்று நீரை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறு..

தலித் இளைஞர் ஒருவரை கிராமப் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது ஊரைச் சேர்ந்த சிலர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில... மேலும் பார்க்க

மணிப்பூரில் தொடரும் இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. நிலைமை கட்டுக்குள் வராததால், தற்போது மேலும் இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதன்படி மணிப... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் எல்லை மீறும் ஆபாசம்.! சட்டம் கடுமையாக்கப்படும்: மத்திய அரசு

சமூக ஊடகங்களில் எல்லை மீறும் ஆபாசப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் இன்றைய(நவ... மேலும் பார்க்க