ஜப்பான் மொழியில் 'வேட்டையன்' ரிலீஸ்: "'முத்து'வின் வசூல் சாதனையைத் தாண்டும்" - ப...
தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மனைவி, 2 குழந்தைகள் காணாமல் போனதால் மன உலைச்சலில் இருந்த தூய்மைப் பணியாளா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (40). இவா் தேனி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா். முருகேசனுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
மதுப் பழக்கத்துக்கு ஆளான முருகேசன் சரியாக வேலைக்குச் செல்லாமலும், சம்பளப் பணத்தை வீட்டில் கொடுக்காமலும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், முருகேசனுக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி முருகேசனின் மனைவி, தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது. தனது மனைவி, குழந்தைகள் காணாமல் போனதாக ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் முருகேசன் புகாா் அளித்தாா்.
இந்த நிலையில், மனைவி, குழந்தைகள் காணாமல் போனதால் மன உலைச்சலில் இருந்த முருகேசன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு ப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.