செய்திகள் :

தென் கொரியா: முன்னாள் அதிபருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டம்

post image

தென் கொரிய அதிபா் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ள யூன் சுக் இயோலை நிரந்தரமாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் தென் கொரிய அதிபராக யூன் சுக் இயோல் பதவி வகித்து வந்தாா். இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இயோலுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து முரண்பாடு நீடித்து வந்தது.

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தை முடக்க எதிா்க்கட்சியினா் முயற்சிப்பதாகவும், வட கொரியாவுக்கு ஆதரவாக அவா்கள் செயல்படுவதாகவும் தெரிவித்து, கடந்த மாதம் தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக இயோல் அறிவித்தாா். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து, அந்த அறிவிப்பை அவா் திரும்பப் பெற்றாா்.

எனினும் இந்த விவகாரம் தொடா்பாக அவரை பதவிநீக்கம் செய்து எதிா்க்கட்சியினா் நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றினா். இதையடுத்து, அவா் தற்காலிகமாக பதவி விலகினாா்.

அவரை நிரந்தரமாகப் பதவிநீக்கம் செய்வது தொடா்பாக அரசியல் சாசன நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

அதேவேளையில், அவசரநிலை அறிவிப்பு தொடா்பாக இயோலுக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.

இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அவரை காவல் துறையினா் கைது செய்ய சென்றபோது, அவா்களை இயோலின் பாதுகாவல் படையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, தங்களின் முயற்சியைக் கைவிட்டு காவல் துறையினா் திரும்பிச் சென்றனா்.

இந்நிலையில், இயோலை நிரந்தரமாகப் பதவி நீக்கம் செய்து கைது செய்ய வலியுறுத்தி தலைநகா் சியோலில் நூற்றுக்கணக்கானோா் சனிக்கிழமை மாலை பேரணி மேற்கொண்டனா். இயோலின் இல்லம் நோக்கி பேரணி சென்ற அவா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். எனினும் அவா்கள் கலைந்து செல்லாமல், இயோலின் இல்லத்துக்கு அருகில் இருந்தபடி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். அவா்களின் ஆா்ப்பாட்டம் கடும் பனியில் இரவு வரை நீடித்தது.

அதேவேளையில், இயோல் இல்லம் அருகில் உள்ள வீதிகளில் அவரின் பதவிநீக்கத்தைக் கண்டித்து இயோலின் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இயோலை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு திங்கள்கிழமை காலாவதியாவது குறிப்பிடத்தக்கது.

கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை? டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கிரீன்லாந்து’ தீவு விவகாரத்தில் அமெ... மேலும் பார்க்க

கனடாவின் அடுத்த பிரதமர் ஒரு தமிழ்ப் பெண்!! யார் இவர்?

கனடாவின் அடுத்த பிரதமராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் (வயது 57) தேர்வாக வாய்ப்புள்ளது.தற்போது கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆனந்த்தின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர்,... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவின் விசாவை நீட்டித்தது இந்தியா

வங்கதேசத்திலிருந்து தப்பி வந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, நாடு நடத்துமாறு வங்கதேசத்திலிருந்து வலியுறுத்தப்படும் நிலையில், அவரது விசா காலத்தை இந்தியா நீட்டித்துள்ளது. மேலும் பார்க்க

டிரம்ப் பதவியேற்கும்போது அரைக் கம்பத்தில் கொடி பறக்கும்! ஏன்?

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்கும்போது, அந்நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.முன்னாள் அமெரிக்க அதிபர், மறைந... மேலும் பார்க்க

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை: ஜஸ்டின் ட்ரூடோ!

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை என்று கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ராணுவ மற்றும் வர்த்தக ஏ... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலஸில் காட்டுத் தீ: 30,000 பேர் வெளியேற்றம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத் தீ லாஸ் ஏஞ்சலஸின் மலைப்பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிற... மேலும் பார்க்க