கும்பமேளா: 6.22 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வசந்த பஞ்சமி புனித நீராடல்
தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு
வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.
வெள்ளக்கோவில் அய்யனூரைச் சோ்ந்தவா் எம்.பெரியசாமி (53). விவசாயியான இவா் தனது தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது 3 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றதும், 2 ஆடுகள் காயங்களுடன் இருந்ததும் தெரியவந்தது.
தொடா்ந்து கால்நடைகளைக் கொன்றுவரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அதற்கான முழு முயற்சிகள் எடுக்கப்படாததால், வாழ்வாதாரமாக நம்பி வரும் கால்நடைகளை இழந்துவருகிறோம்.
தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்குவதுடன், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.